தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள் ; பொங்கிய யோகி ஆதித்யநாத் - எதற்காக தெரியுமா?

Samajwadi Party Tamil nadu Yogi Adityanath Tamil
By Karthikraja Jun 27, 2024 04:30 PM GMT
Report

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாடி எம்.பியின் கருத்துக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செங்கோல்

கடந்த ஆண்டு மே மாதம் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தின் செங்கோல் வைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஆதீனங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். முன்னதாக ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோலை பிரதமர் மோடி கீழே விழுந்து வணங்கினார். 

sengol in india parliment by modi

தற்போது இந்த செங்கோலை அகற்ற வேண்டுமென சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், "மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்" என எழுதப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் மோடி வைக்கும் செங்கோல்; சோழர்களுக்கு தொடர்பா - வரலாறு தெரியுமா?

நாடாளுமன்றத்தில் மோடி வைக்கும் செங்கோல்; சோழர்களுக்கு தொடர்பா - வரலாறு தெரியுமா?

யோகி ஆதித்யநாத்

இதற்கு பாஜக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

yogi adithyanath

அந்த பதிவில், "இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்." என கூறியுள்ளார்.