நாடாளுமன்றத்தில் மோடி வைக்கும் செங்கோல்; சோழர்களுக்கு தொடர்பா - வரலாறு தெரியுமா?
புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோலுக்கும் சோழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவுவார் என அமித்ஷா தெரிவித்த தகவல் கவனம் பெற்றது.
தொடர்ந்து, அதனை பலரும் இதை சோழர் கால செங்கோல் என்று கூறியுள்ளனர். ஆனால் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள தமிழ்நாட்டின் செங்கோலுக்கும் சோழர்கள் ஆட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
செங்கோல்
சோழர்கள் காலத்தில் இப்படி செங்கோல் இருந்தது. ஆட்சி மாறும் போது அதை மாற்றுவார்கள். அதை இப்போது நாம் பயன்படுத்தலாம். ஆங்கிலேயர் ஆட்சி முடிவிவிற்கு வந்ததன் அறிகுறியாக அப்போது ராஜாஜி குறிப்பிட்டுள்ளார். அதனை நேருவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
5 அடி நீளம் உள்ள இந்த செங்கோலின் தலை பகுதியில் நந்தி சிலை இருக்கும். நேரு இறந்த பின் செங்கோல் டெல்லியில் இருந்து அலஹாபாத் மியூசியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜவஹர்லால் நேருவுடன் தொடர்புடைய பல வரலாற்று பொருட்களுடன், அருங்காட்சியகத்தின் நேரு கேலரியின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது புதிய நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்காக இந்த செங்கோல் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளது.