எடுயூரப்பா மீது போக்சோ புகார் கொடுத்த பெண் - மருத்துவமனையில் மரணம்! அதிர்ச்சி பின்னணி

BJP Karnataka Death
By Karthick May 28, 2024 04:54 AM GMT
Report

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு.

கர்நாடக முன்னாள் முதல்வரான பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் மருத்துமனையில் உயிரிழந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BS yediyurappa

பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மீது கடந்த பிப்ரவரி 2 ம் தேதி பெண் ஒருவர் உதவி கேட்க சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு - மைனர் பொண்ணுக்கு பாலியல் தொல்லை

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு - மைனர் பொண்ணுக்கு பாலியல் தொல்லை

இந்த புகாரையடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. தேர்தல் நேரத்தில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எடியூரப்பா மறுப்பு தெரிவித்தார்.

BS yediyurappa

இதனையடுத்து இவ்வழக்கு விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது. 53 வயதான அந்த பெண் நேற்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற வந்தபொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், அவருக்கு ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.