போக்ஸோ வழக்கில் சரிக்கட்ட தாய்க்கு பணம் கொடுத்த எடியூரப்பா - அதிர வைக்கும் சிஐடி அறிக்கை
எடியூரப்பா மீதான போக்ஸோ வழக்கில் நீதிமன்றத்தில் சிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
எடியூரப்பா
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மீது கடந்த பிப்ரவரி 2 ம் தேதி பெண் ஒருவர் உதவி கேட்க சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் அவருக்கு பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாய் திறக்காமல் இருக்க எடியூரப்பா அந்த தாய்க்கும், அவரின் பெண்ணுக்கும் பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றப்பத்திரிக்கை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பேஸ்புக்கில் எடியூரப்பாவை குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடனே எடியூரப்பாவின் ஆதரவாளர்களான அருண், ருத்ரேஷ், மாரிச்சாமி ஆகியோர் அப்பெண்ண்ணை சந்தித்து விடியோவை நீக்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மேலும் எடியூரப்பா சொன்னதாக கூறி, அவர்களுக்கு ரூ. 2 லட்சம் பணமாக அளித்துள்ளனர் என அந்த
குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், கடந்த மாதம் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று குறிப்பிடத்தக்கது.