சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக் - மனைவிக்கு பாக். மந்திரி பதவி!

Pakistan India
By Sumathi Aug 19, 2023 05:10 AM GMT
Report

சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலின் மனைவிக்கு அமைச்சருக்கு இணையான பதவி வழங்கப்பட்டுள்ளது.

யாசின் மாலின்

தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தனிநாடு என விடுதலை பெற வேண்டும் என்பது விடுதலை முன்னணியின் கொள்கை. இதன் தலைவர் யாசின் மாலின்.

சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக் - மனைவிக்கு பாக். மந்திரி பதவி! | Yasin Malik Wife Mushaal Hussain In Pakistan Govt

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் யாசின் மாலிக் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பதவி

இந்நிலையில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசில் யாசின் மாலிக் மனைவிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஆலோசகர் என்றாலும் அமைச்சருக்கு இணையான தகுதி பெற்றவர்.

சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக் - மனைவிக்கு பாக். மந்திரி பதவி! | Yasin Malik Wife Mushaal Hussain In Pakistan Govt

இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் காகர் ஆலோசகராக முஷால் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக்- முஷால் ஹூசைன் திருமணம் 2009ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.