அடுத்த முதல்வர் உதயநிதி - கிரீன் சிக்னல் கொடுத்த பாஜக ?
திமுகவில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் கட்சியின் செல்வாக்கை அவரது மகன் உதய்நிதிஸ்டாலின் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து வருகின்றார். உதயநிதி அமைச்சரான சில மாதத்தில் தற்போது அவர் டெல்லி சென்று அங்கு பாஜகவின் முக்கியத் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளது தற்போது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.
உதயநிதி பாஜக
மத்தியில் ஆளும் பாஜகவின் முக்கியத்தலைவர்களை உதயநிதி சந்தித்தது மட்டும் அல்லாது பிரதமர் மோடியினை சந்தித்தன் மூலம் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பதை நிரூபித்துள்ளார். அதே சமயம் பிரதமர் மோடி உதயநிதியை சந்தித்தன் மூலமாக உதய்நிதியை முதல்வருக்கு இணையாக பாஜக ஏற்றுக்கொண்டு விட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
அடுத்த முதல்வர்
பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் உதயநிதியின் சந்திப்பு எந்தவித தடங்கலும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் மூத்த அமைச்சர்கள் சிலரும் கடந்த ஒருமாத காலமாக கடும் முயற்சித்த நிலையில் பிரதமர் மோடியினை உதயநிதி ஸ்டாலின் சந்திக்க எந்த தடையும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாகவே உதயநிதி ஸ்டாலினை வாரிசு என விமர்சனம் செய்து வந்த தமிழக பாஜக உதயநிதி பற்றி பெரிதாக விமர்சனம் வைப்பதில்லை ஆகவே உதயநிதிஸ்டாலினை அடுத்த முதலமைச்சராக பார்க்க எதிர்கொள்ள பாஜக தயாராக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.