அந்தரத்தில் ஸ்கை டைவிங் செய்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் - த்ரில்லிங்கான வீடியோ

video yashika sky dive
By Jon Mar 17, 2021 01:09 PM GMT
Report

யாஷிகா ஆனந்த் முதன்முதலில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக ரசிகர்களால் அறியப்பட்டார். பின்னர், அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார். பிக் பாஸ் புகழ் மூலமாக தமிழ் சினிமாவில் படு பிஸியாக உள்ளார் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் வெளியிடுகிறார்.

அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது யாஷிகா துபாய்க்கு சுற்றுலா சென்று இருந்த போது ஸ்கை டைவிங் செய்து உள்ளார். அதனை வீடியோவாக தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.  

This was crazy!! Thrilling and of-course one of my bucket list !!" என அவர் குறிப்பிட்டு உள்ளார். இன்ஸ்டாகிராமில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து இருக்கிறார்கள். அது மட்டும் இன்றி அவர் zipline adventureலும் ஈடுபட்டு இருக்கிறார். அந்த வீடியோவை சென்ற வாரம் அவர் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.