விபத்துக்கு பின் மீண்டும் புது கார் வாங்கிய யாஷிகா ஆனந்த் - இவ்வளவு விலையா!
யாஷிகா ஆனந்த் விபத்துக்கு பின் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
யாஷிகா ஆனந்த்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தன் தோழியுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும்போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பாவ்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
New Car
யாஷிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் படிப்படியாக குணமடைந்து தற்போது நடிக்க தொடங்கி உள்ளார். அதனையடுத்து விபத்துக்கு பின் Volkswagen Virtus மாடல் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

டாப் எண்ட் மாடல் காரான இதன் விலை ரூ.22 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan