விரைவில் கைதாகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்? ரசிகர்கள் அதிர்ச்சி!

arrest soon actress yashika
By Anupriyamkumaresan Jul 29, 2021 02:21 AM GMT
Report

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சாலையில் காரில் பயணித்துள்ளார்.

அப்போது, ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நள்ளிரவு 1 மணியளவில் அவர் பயணித்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விரைவில் கைதாகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்? ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Yashika Anand Soon Arrest For Accident

இதில், நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவாணி என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் காரணமாக நடிகை யாஷிகா ஆனந்தின் மீது ஏற்கனவே அதிவேக பயணம் மற்றும் விபத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் என இரண்டு பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

விரைவில் கைதாகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்? ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Yashika Anand Soon Arrest For Accident

மேலும் அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், அவர் அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.