படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குநர்; அம்மாவிடமே கேட்டார் - யாஷிகா ஆனந்த் பகீர்!
தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து யாஷிகா ஆனந்த் பகிர்ந்துள்ளார்.
யாஷிகா ஆனந்த்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து சோஷியல் மீடியாக்களிலும் தனது புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கிடையில் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா தற்போது நலம் பெற்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு பெரிய தமிழ் ஹீரோ அப்பாவாக நினைக்கும் இயக்குநர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார். ஆடிஷனுக்கு அழைத்திருந்தார். ஸ்கிரீன் டெஸ்ட் செய்துவிட்டு, தனது படங்களை எடுத்தார். பிறகு வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு அம்மாவிடம் பேசினார்.
வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். அந்த சம்பவத்தின் மூலம் தான் சந்தித்த மன உளைச்சலில் இருந்து விடுபட்டேன். பின்னர் அவரால் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அவரின் பெயரை வெளியிடவில்லை.
ஒருமுறை எனது வீட்டின் அருகே ஒரு போலீஸ்காரர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அவர் மீது புகார் அளித்ததையடுத்து அவரை இடமாற்றம் செய்யப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.