டெஸ்ட் கிரிக்கெட் - ஜெய்ஸ்வால் அசத்தல் இரட்டை சதம்- இந்திய மண்ணில் இது..! அடுத்தடுத்த சாதனைகள்..!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகின்றது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 336/6 ரன்களை எடுத்திருந்தது.
துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 176 ரன்களை குவித்து களத்தில் இருந்தார். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால்,டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை கடந்தார்.
ஜெய்ஸ்வால் சாதனை
அவர் 290 பந்துகளில் 19 ஃபோர்கள், 7 சிக்ஸர்கள் விளாசி 209 ரன்களை குவித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஜானி பைர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால், இன்றைய இரட்டை சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்திய மண்ணில் முதல் இரட்டை சதமடித்துள்ள ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 22 ஆகிறது.
இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக, வினோத் காம்ப்ளி 21 வயதில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
அவரை தொடர்ந்து, இந்திய அணியின் ஜாம்பவான் கவாஸ்கர் 21 வயது 283 நாட்களில் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.