விராட் வந்ததும் நீங்க கிளம்புங்க - டெஸ்ட் ஆடுனது போதும் - இளம் வீரரை வறுக்கும் ரசிகர்கள்..!

Virat Kohli Indian Cricket Team Shubman Gill
By Karthick Jan 29, 2024 05:51 AM GMT
Report

இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றதை தொடர்ந்து ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை விமர்சித்து வருகின்றார்.

இந்தியா தோல்வி

முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றும், இந்திய அணி, 2-வது இன்னிங்சில் 231 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

indian-fans-shubman-gill-in-his-dismissal-batting

கேப்டன் ரோகித் ஷர்மாவை தவிர மற்ற வீரர்கள் 30 ரன்களை கூட எடுக்கலாம் வெளியேறி பெரிதும் இந்திய அணி ரசிகர்களை ஏமாற்றினார். ஒரு நாள், டி20 போட்டிகளில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் சமீபமாக திணறி வருவதால்,

27 வருஷத்திற்குப் பின்.. வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை - கண்ணீர் விட்ட பிரையன் லாரா!

27 வருஷத்திற்குப் பின்.. வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை - கண்ணீர் விட்ட பிரையன் லாரா!

அவரை ரசிகர்கள் பெரிதும் விமர்சிக்க துவங்கிவிட்டனர்.

விராட் வந்ததும்

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் இல்லாத காரணத்தால், ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என ஆர்டர் அமைந்துள்ளது. ஆனால், விராட் அணிக்கு திரும்பும் பட்சத்தில் இதில் ஒருவர் நீக்கப்படுவர்.

indian-fans-shubman-gill-in-his-dismissal-batting

அதனை வைத்து ரசிகர்கள், கில்'லை பிளையிங் 11'இல் இருந்து வெளியேறுங்கள் என கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட துவங்கிவிட்டனர்.