முதல் வீரராக உலக சாதனை; பால்கடை - பானிபூரி - ஜெய்ஸ்வால் ஜெயித்தது எப்படி?

Cricket Uttar Pradesh Indian Cricket Team Yashasvi Jaiswal
By Sumathi Feb 22, 2024 07:15 AM GMT
Report

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் 14 பவுண்டரி, 12 சிக்சர்களும் அடங்கிய இரட்டை சதம் அடித்திருந்தார். இப்படி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ் வாலின் வெற்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளாது.

jaiswal family

போட்டிக்கு பிறகு ஒரு பேட்டியில் ஜெய்ஸ்வால்,"டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் சிறந்து விளங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தேன். நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அதைக் குறிப்பிடத்தக்கச் சாதனைகளாக மாற்றுவது முக்கியம்" என்று குறிப்பிட்டுருந்தார்.

சின்ன பையன் வாழ்க்கையை காலி பண்ணிடாதீங்க..! ஜெய்ஸ்வாலின் நிலை - கம்பீர் Advice

சின்ன பையன் வாழ்க்கையை காலி பண்ணிடாதீங்க..! ஜெய்ஸ்வாலின் நிலை - கம்பீர் Advice

கடந்து வந்த பாதை

உத்தரப்பிரதேசம், பதோஹியில் உள்ள சூரியவானில் பிறந்த இவர், இளம் வயதிலையே கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் மற்றும் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போன்ற பிராண்ட் ஆகணும் என்ற கனவு மெய்யாக அவர் மும்பைக்கு வந்துள்ளார். வறுமையான குடும்பத்தில் இருந்து வந்த இவர் வயிற்று பிழைப்புகாக ஒரு பால் கடையில் பணி புரிந்தும், ஆசாத் மைதானத்தில் பானிபூரி விற்றும் பிழைத்துள்ளார்.

முதல் வீரராக உலக சாதனை; பால்கடை - பானிபூரி - ஜெய்ஸ்வால் ஜெயித்தது எப்படி? | Yashasvi Jaiswal Journey To World Record Cricketer

இவ்வாறு 3 வருட போராட்டதிற்கு பிறகு, ஜெய்ஸ்வாலின் திறமையைக் மும்பை பயிற்சியாளரான ஜ்வாலா சிங் கண்டறிந்து அவருக்கு வழிக்காட்டினார். அவரது உதவியால், 2018 ஆம் ஆண்டு ஜெய்ஸ்வாலால் இறுதியாக இந்திய அணியின் u-19 இல் இடம் பெற்று போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனையடுத்து, ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் கவனத்தை ஈர்த்தது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.4 கோடிக்கு அவரை தேர்ந்தெடுத்தனர். இவ்வாறு அவரின் இடைவிடாத சிறப்பான ஆட்டம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ”7 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம், 2 இரட்டை சதம், 3 அரைசதங்களை” அடித்து தவிர்க்க முடியாத வீரராக உருமாறியுள்ளார்.

இந்திய அணியின் ஓப்பனராக இருந்த விரேந்திர சேவாக்கை போலவே யஷஸ்வி, ஒரு டெஸ்ட் தொடரில் 22 சிக்சர்களை அடித்து 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக உலக சாதனை படைத்துள்ளார். மேலும், டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் (12) அடித்து பாகிஸ்தான் வீரர் இம்ரான் கானின் 28 வருட சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு சதமடித்த 6வது இந்திய வீரராக மாறி சாதனை படைத்து அசத்தியுள்ளார் ஜெயஸ்வால்.