நான் மொத்த கெரியரில் செய்ததை, ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்சில் துவம்சம் செய்துவிட்டார் - இங்கி. வீரர் பாராட்டு!
இந்திய வீரர் ஜெய்ஸ்வாலை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார்.
பறந்த சிக்ஸர்கள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மேலும், 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 போட்டிகளில் 545 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்து வருகிறார். முன்னதாக 3-வது போட்டியின் 2-வது இன்னிங்சில் 12 சிக்சர்கள் பறக்க விட்டார்.
பாராட்டிய வீரர்
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை அவர் சமன் செய்தார். இந்நிலையில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "என்னுடைய மொத்த கெரியரில் நான் அடித்ததை விட ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் என்னுடைய கெரியர் முழுவதும் நான் செய்ததை ஒரு இன்னிங்சிலேயே அவர் முறியடித்து விட்டார் " என்று தெரிவித்துள்ளார். அலெஸ்டர் குக் தன்னுடைய கெரியரில் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.