விரைவில் எக்ஸ் மெயில் - ஜி மெயிலுக்கு போட்டியாக இறக்கும் எலான் மஸ்க்!

Google Elon Musk X
By Swetha Feb 27, 2024 11:32 AM GMT
Report

எக்ஸ் மெயில் சேவையின் வரவு குறித்து எலான் மஸ்க் உறுதி செய்த பதிவு வைரலாகி வருகிறது.

எலான் மஸ்க்

உலகின் மிக பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார். அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆன பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார்.

elon musk

ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வசூலிப்பது வரை கொண்டுவந்துள்ளார். அதுதொடர்ந்து, ட்விட்டரின் பெயரை எக்ஸ் எனவும் மாற்றி இருந்தார்.

விண்வெளிக்கு சுற்றுலா - மனித குல வரலாற்றில் புதிய சாதனை

விண்வெளிக்கு சுற்றுலா - மனித குல வரலாற்றில் புதிய சாதனை

எக்ஸ் மெயில்

இந்நிலையில், எக்ஸ்-ன் பாதுகாப்பு பொறியியல் குழுவின் மூத்த உறுப்பினர் நாதன் மெக்ராடி, எக்ஸ்-மெயிலை எப்போது அறிமுகம் செய்யப் போகிறோம் என ட்வீட் செய்திருந்தார்.

musk tweet

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், எக்ஸ்-மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இருப்பினும், சேவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ஜிமெயில் சேவைகள் நிறுத்தப்போவதாக தகவல் ஒன்று  இணையத்தில் வேகமாக பரவி வந்த நிலையில், எக்ஸ் மெயில் சேவை தொடங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.