எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் - இ-பாதுகாப்பு ஆணையம் அதிரடி!

Twitter Australia World X
By Jiyath Oct 17, 2023 04:01 AM GMT
Report

எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்துக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் இணைய பாதுகாப்பு ஆணையம்.

எக்ஸ் நிறுவனம்

ஆஸ்திரேலியாவில், சமூகவலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) சட்ட விரோத பதிவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதிவுகளை சரியாக கையாளவில்லை என அந்த நிறுவனத்தின் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டது.

எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் - இ-பாதுகாப்பு ஆணையம் அதிரடி! | Australia Imposed Fine Of Rs 3 Crore On X Twitter

அதிலும் குறிப்பாக பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகளை எக்ஸ் நிறுவனம் எவ்வாறு கையாண்டது என முழுமையாக விளக்கம் அளிக்கவில்லை.

அபராதம்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இணைய பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையம் , எக்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.3 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து எக்ஸ் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று கூறப்படுகிறது.