பயிற்சியாளர் தேர்வு - கம்பீருக்கு போட்டியாக கலந்து கொண்ட தமிழக முன்னாள் வீரர்!! குழப்பத்தில் BCCI
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற சந்தேகம் நீடித்து வருகின்றது.
தலைமை பயிற்சியாளர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது டிராவிட் பதவி வகித்து வருகிறார். நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 தொடருடன் அவரின் தலைமை பதிவு பொறுப்பு காலம் முடிவடைகிறது.
அவருக்கு அடுத்ததாக யார் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்தன. முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கம்பீரின் பெயரே அடிபட்ட நிலையில், கிட்டத்தட்ட அவர் உறுதிப்படுத்தப்பட்டு விட்டார்.அதற்கான நேர்காணலிலும் அவர் பங்கேற்றார்.
அவரை தவிர வேறு யாரும் வரவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் ஒருவர் நேர்காணலுக்கு சென்றுள்ளார்.
யார் இந்த ராமன்?
வெளியான செய்திகளின் படி, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் WV ராமன் நேரில் சென்று இந்த நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார். ஆனால், கம்பீர் காணொளி வாயிலாகவே கலந்து கொண்டுள்ளார்.
வூர்கேரி வெங்கட் ராமன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆவார். அவர் 2018 இல் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆனார் மற்றும் 2021 இல் பிரிந்தார். ராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பகுதி நேர இடது கை சுழற்பந்து வீச்சாளர்.
ராமன் தேசிய அணிக்காக 11 டெஸ்ட் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி குறுகிய சர்வதேச வாழ்க்கையை கொண்டிருந்தார். மறுபுறம், ராமன் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வெற்றிகரமான உள்நாட்டு வாழ்க்கையைப் பெற்றார்.