ரோகித்துக்கு ஆப்பு...ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாகணும் - விடாப்பிடியாக நிற்கும் கம்பீர்!!
இந்தியாவின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஷ்ரேயஸ் ஐயர்
கொல்கத்தா அணியின் கேப்டனாக இம்முறை கோப்பையை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியின் ஆண்டு ஒப்பந்தத்தில் கூட இடம்பெறவில்லை. ஆனால், அவர் மீண்டும் அணியில் இடம்பெறவேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கோரிக்கைகளை வைத்து வந்தார்கள்.
ஆனால், அதிகாரபூர்வமாக அவர் அணிக்கு திரும்பவில்லை. அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வரவிருக்கும் நிலையில், அவருடைய influnece'இல் அணியில் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என செய்திகள் வெளிவந்தன.
வந்ததுமே கம்பீர் வைத்த செக்!! ஒதுக்கப்படுவார்களா விராட் - ரோகித் - இந்திய அணியில் பெரும் மாற்றங்கள்?
கேப்டனாக
அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 2024-25 ஆம் ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததை அடுத்து ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்த அணியில் தான் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று தெரிகிறது. சிறு சிறு அணிகளை எதிர்கொள்ள இந்தியா பி என்ற அணி உருவாக்க கம்பீர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்த அணிக்கு ஷ்ரேயஸ் ஐயர் தான் கேப்டனாவார் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.