வந்ததுமே கம்பீர் வைத்த செக்!! ஒதுக்கப்படுவார்களா விராட் - ரோகித் - இந்திய அணியில் பெரும் மாற்றங்கள்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.
கம்பீர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் டிராவிட்'டின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த இடத்திற்கு இப்போது கம்பீர் வந்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நேர்காணலிலும் அவர் பங்கேற்றுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் எதிர்பாராத விதமாக பெரும் ஆதிக்கத்தை செலுத்தி கோப்பையையும் கைப்பற்றியது கொல்கத்தா அணி.
அதனை தொடர்ந்து தான் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பந்தயத்தில் முந்தினார். அவர் நேர்காணலின் போது, ஒரு திடுக்கிடும் கோரிக்கையை வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது, தான் தலைமை பயிற்சியாளர் பொறுப்பினை ஏற்கும் நிலையில், அணிக்கு டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திற்கும் தனி தனி அணிகளை தயார்ப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. அவ்வாறு வரும் நிலையில், இது நேரடியாக அணியின் சீனியர் வீரர்களையே தாக்கும்.
செக்
அதாவது, விராட் - ரோகித் போன்ற வீரர்கள் மீது டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்ற கருத்துக்கள் அவ்வப்போது வலுத்து வருகிறது. அப்படி, 3 தனி தனி அணிகள் வந்தால், நிச்சயமாக டி20 அணிகளில் இருந்து இவர்கள் தானாகவே ஒதுக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது.
முதல் கண்டிஷனே சீனியர் வீரர்களுக்கு செக் வைக்கும் வகையில் கம்பீர் வைத்துள்ளதாக கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவர துவங்கிவிட்டன.