இது எப்படி நியாயம் - துரோகம் செய்த ஐசிசி? ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா!!
இந்தியா அணி சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறியுள்ளது.
சூப்பர் 8
இடம் பெற்ற ஏ பிரிவில் விளையாடிய 3 போட்டிகளிலும் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி, கனடா அணிக்கு எதிரான போட்டியில் மழை காரணமாக விளையாடவே இல்லை. பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா அடுத்த சுற்றான சூப்பர் 8'இற்கு தகுதி பெற்றுள்ளது.
இதில், இந்தியா ஆப்கனிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. பாகிஸ்தான் தவிர மற்ற அணிகள் சிறிய அணிகளே. ஆகையால் சற்று கவனத்துடன் விளையாடி வெற்றியை தனதாக்கியது இந்தியா. ஆனால், சூப்பர் 8 சுற்றில் கவனம் அதிகளவில் இருப்பது அவசியம்.
இந்தியா அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு எதிர்பாராத பிரச்சனை ஒன்று இந்திய அணிக்கு காத்திருக்கிறது. ஆம், இந்த உலகக்கோப்பையில் மழை தொடர்ந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
சிக்கல்
மழை குறுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியா அணி பலமான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த உலகக்கோப்பையில் இது வரை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் ஒரு போட்டி கூட ஆடவில்லை.
அதே நேரத்தில், ஆஸ்திரேலியா - ஆப்கனிஸ்தான் அணிகள் அங்கு போட்டிகளை விளையாடிய அனுபவத்துடன் சூப்பர் 8 சுற்றிற்கு வந்துள்ளது. இது இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த சவாலை எப்படி கையாளுவார் என்ற எதிர்பார்ப்பை கொண்டுள்ளர்கள்.