விராட் கோலியை விட இந்த விஷயத்தில் என் தம்பி தாம் பெஸ்ட்...கிட்ட கூட இல்லை !! உமர் அக்மல்
சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானை சேர்ந்த 34 வயதான உமர் அக்மல் தனது சட்டை இல்லாத புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார். தான் செய்து வரும் கடுமையான உடற்பயிற்சியின் அடையாளமாக தனது சிக்ஸ் பேக் அவர் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “கவனம் தயவு செய்து. நான் தகுதியற்றவன் என்று நினைப்பவர்களுக்கு இது” என்று உமர் அக்மல் கமெண்ட் செய்திருந்தார். இந்நிலையில் தான் அவரின் சகோதரரும் பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல் விராட் கோலியுடன் உம்ரன் அக்மலை ஒப்பிட்டு விமர்சித்திருக்கிறார்.
புள்ளிவிவரங்கள் எனக்கு அண்மையில் தான் கிடைத்தன. உலகக் கோப்பை டி20 போட்டிகளில் உமர் அகமலே விராட் கோலி விட சிறந்த ரன்களை எடுத்துள்ளார் என குறிப்பிட்டார்.
விராட் கோலியின் செயல்பாடுகளுக்கும் அவரது aura'விற்கும் அருகில் கூட உமர் இல்லை, என்ற போதிலும், டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை விட உமர் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றுள்ளார் என சுட்டிக்காட்டினார் கம்ரன் அக்மல்.
தங்களிடம் PR நிறுவனங்கள் இல்லாததால், சமூக ஊடகங்களில் எங்கள் புள்ளிவிவரங்கள் மற்றும் செயல்திறன்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்த கம்ரன் அக்மல், டி20 உலகக் கோப்பையில் விளையாடும் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரிடம் இதுபோன்ற புள்ளிவிவரங்கள் இருந்தால், விராட் கோலியின் மகத்துவத்தை அவர்கள் கேள்வி எழுப்பியிருப்பார்கள் என்று அக்மல் கூறுகிறார்.