போதும் டா சாமி!! விராட் விளையாடுனது போதும்...யாராவது அவர நிறுத்துங்க - கடுப்பான முன்னாள் வீரர்
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி நேற்று அதிர்ச்சியளிக்கும் வகையில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்தியா வெற்றி
நியூயார்க் நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, துவக்கம் முதலே அமெரிக்கா அணி வீரர்களை தொடர்ந்து கட்டுப்படுத்தினர். குறிப்பாக அர்ஷிதீப் சிங் அபாரமாக பந்து வீசினார்.
அடுத்தடுத்து அமெரிக்கா வீரர்கள் அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணி, வெறும் 110/8 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் வந்த நிதிஷ் குமார் 27 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷிதீப் சிங் 4 ஓவர்கள் முழுமையாக வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களம் கண்ட இந்திய அணி பெரிய அதிர்ச்சி துவக்கத்திலேயே காத்திருந்தது. முதல் ஓவரின் 2-ஆம் பந்தில் விராட் கோலி கோல்டன் டக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். கேப்டன் ரோகித் சர்மாவும் 3 ரன்னில் வெளியேறினார்.
இத்தோட போதும்
ரிஷப் பண்ட் 18 ரன்களில் வெளியேறிய நிலையில், கைகோர்த்த சூர்யகுமார் யாதவ் - சிவம் துபே இணையை கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தது. சூரியகுமார் யாதவ் 50 ரன்களும், துபே 31 ரன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்தில் விராட் அவுட்டானது தான் பலரையும் அதிரவைத்தது.
அவருக்கு ஆதரவாக அணியின் முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சஞ்சய் மஞ்சேர்க்கர் பேசும் போது, விராட் கோலியின் பிரச்சனை என்னவென்றால், கடந்த இரண்டு வருடங்களாக அவரது ஸ்டிரைக் ரேட் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்த ஐபிஎல் சீசனில் அவர் அதை முற்றிலும் மாற்றினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150ஐ எட்டியது, மற்றவர்கள் கிட்டத்தட்ட 200 ஆக இருந்தாலும், அது வேறு தலைப்பு. அவர் அதே மனநிலையுடன் டி20 உலகக் கோப்பைக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் அவருக்கு ஆடுகளங்களை உதவியிருந்தால், பழைய விராட் கோலி மிகவும் சிறப்பாக இருந்திருப்பார்" என்று மஞ்ச்ரேக்கர் கூறினார்.