செய்யாத குற்றம்; 7 ஆண்டு சிறை, 47 வருட போராட்டம் - நீதிபதியை கட்டி அழுத முதியவர்!
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தவறாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
தென் கரோலினாவைச் சேர்ந்தவர் லியோனார்ட் மேக்(72). 50 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 7 ஆண்டு சிறைக்குப் பிறது தற்போது அட்வான்ஸ்டு டிஎன்ஏ சோதனை மேக்கை இவ்வழக்கில் இருந்து மீட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட பாலியல் வழக்கிற்குப் பின்னால் அவர் இல்லை என வெஸ்ட்செஸ்டர் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில், ”நான் செய்யாத குற்றத்துக்காக ஏழரை வருடங்களை சிறையில் கழித்து, 50 வருடங்களாக இந்த அநியாயத்தை தலைக்கு மேல் சுமந்து கொண்டு வாழ்ந்தேன்.
விடுவிப்பு
இது எனது வாழ்க்கையை மாற்றியது, நான் வாழ்ந்த இடம் முதல் எனது குடும்பத்துடனான உறவு வரை அனைத்தையும் மாற்றியது. ஒரு நாள் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை. இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது, இறுதியாக என்னால் மூச்சுவிட முடிகிறது.
நான் இறுதியாக சுதந்திரமாக இருக்கிறேன். கடைசியில் விடுதலை! கடைசியில் விடுதலை! எல்லாம் வல்ல கடவுளுக்கு நன்றி, நான் இறுதியாக சுதந்திரமாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் 1976 ஆம் ஆண்டு தனக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்த மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனி இ.மினிஹானை லியோனார்ட் மேக் கட்டிப்பிடிப்பதைக் காணலாம். Innocence Project மூலம் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட தவறான தண்டனை என இது அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.