புகாரளிக்க வந்த பெண்; 3 நாள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை - காவலர்கள் கொடூரம்!

Sexual harassment Crime
By Sumathi Sep 06, 2023 04:54 AM GMT
Report

கணவன்மீது புகாரளிக்க வந்த பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

ஹரியானா, ஹசன்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒருவர் கணவர்மீது புகாரளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது பணியிலிருந்த சப்-இஸ்பெக்டர் ஷிவ் சரண், பெண்ணின் புகாரப் பெற மறுத்ததோடு,

புகாரளிக்க வந்த பெண்; 3 நாள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை - காவலர்கள் கொடூரம்! | Women Raped By Sub Inspector With Aids In Haryana

3 காவலர்களோடு வயல்வெளிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, பல்வாலிலுள்ள சாந்தி என்ற பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கும் இரவு முழுவதும் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

காவலர்கள் கொடூரம்

அதன்பின் பிஜேந்திரா என்பவருக்கு அந்தப் பெண்ணை விற்றுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக பதிவுசெய்து, மிரட்டி 3 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்துவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

புகாரளிக்க வந்த பெண்; 3 நாள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை - காவலர்கள் கொடூரம்! | Women Raped By Sub Inspector With Aids In Haryana

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஒரு செல்போன் கிடைத்ததன் மூலம், அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பெண்ணை மீட்டனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஷிவ் சரண், அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.