கொடூரம்: 6 வயது சிறுமியை பள்ளி பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது மாணவன்!
6 வயது சிறுமி பள்ளி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
டெல்லி: பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமி பள்ளி பேருந்தில் மூத்த மாணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தகவல் கிடைத்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை எழுத்துப்பூர்வமாக பேகம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 16 வயது மாணவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த புகாரில் "பாதிக்கப்பட்ட சிறுமியை பள்ளி பேருந்தை விட்டு இறக்கி விட்டு சென்றுள்ளனர். அப்போது சிறுமியின் பை சிறுநீர் கழித்ததால் ஈரமாக இருந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் தனது மகளிடம் விசாரித்தபோது அதே பள்ளியில் படிக்கும் மூத்த மாணவர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று, பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அடுத்த நாள் பள்ளியின் தலைவர் தங்களை (சிறுமியின் பெற்றோர்கள்) அழைத்து புகாரை வாபஸ் பெறச் சொன்னார் என்று சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பள்ளியின் தலைவர் குழந்தையின் அடையாளத்தை சமூக மக்களிடையே வெளிப்படுத்தியதாகவும் சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி மகளிர் ஆணையம்
இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களுடன் எஃப்ஐஆரின் நகலையும் கோரியுள்ளார்.
காவல்துறையில் புகார் செய்யாததற்காகவும், குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தாததற்காகவும் தலைவர், பள்ளி மேலாளர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பிற பள்ளி அதிகாரிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் டெல்லி காவல்துறையிடம் ஆணையம் கோரியுள்ளது.