காய்ச்சலுக்கு சென்ற சிறுமிக்கு தவறான சிகிச்சை; பலியான சோகம் - கதறும் பெற்றோர்
தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறான சிகிச்சை
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு மேம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு பானுஸ்ரீ(4) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது ஊசி போட்ட இடத்தில் அலர்ஜி போன்று தோன்றியுள்ளது.
குழந்தை பலி
மேலும், மறுநாள் காலையில் அந்த காயம் பெரிதாகி சிறுமி மயக்கமடைந்துள்ளார். இதனால், பதறிப்போன பெற்றோர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்ததில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உடனே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.