மகளுக்கு தவறான சிகிச்சை - கண்னீர் மல்க சாலையில் திடீர் தர்ணாவில் காவலர்

Chennai
By Sumathi Apr 14, 2023 11:02 AM GMT
Report

மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் நடவடிக்கை எடுக்குக் கோரி காவலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

 தவறான சிகிச்சை

ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டராமன் (42). இவர் சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவரது மகள் பிரதிஷா (10). இவருக்கு 3 வயது இருக்கும்போது சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மகளுக்கு தவறான சிகிச்சை - கண்னீர் மல்க சாலையில் திடீர் தர்ணாவில் காவலர் | Daughters Leg Damaged Policeman Protest

அங்கு வழங்கிய மாத்திரை, மருந்துகளை கொடுத்து வந்துள்ளனர். திடீரென மகளுக்கு காலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ரத்தம் உறைதல் ஏற்பட்டு, வலது காலும், இடது கையும் செயலிழந்தன. இதுகுறித்து விசாரித்ததில் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

காவலர் வேதனை

எனவே தவறான சிகிச்சையால்தான் இவ்வாறு நடந்ததாக கூறி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினரிடமும், சுகாதாரத் துறையினரிடமும் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், மகள் பிரதிஷாவுடன் திடீரென ராஜாஜி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையால் போராட்டத்தை கைவிட்டார். இதுகுறித்து அவர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை மட்டுமே எனது மகளுக்கு வழங்கினோம்.

என் மகள் 5 ஆண்டுகளாக மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தார். அதனால் தற்போது எனது மகளின் வலது கால், இடது கை செயல் இழந்துவிட்டன. தவறான சிகிச்சையால்தான், என் மகள் வாழ்க்கை இப்படியாகிவிட்டது. எனவே இது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.