Tuesday, Jul 15, 2025

இளம் எழுத்தாளருக்கு ஓட்டல் அறையில் நடந்த பயங்கரம் - சிக்கிய தொழிலதிபர்!

Sexual harassment India
By Sumathi 3 years ago
Report

எழுத்தாளரை ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபர், தாதா தாவூத் இப்ராஹிம் பெயரைச் சொல்லி அவரை தொடர்ந்து மிரட்டி இருக்கிறார்.

பெண் எழுத்தாளர்

மும்பையில் அம்போலி பகுதியில் வசிக்கும் 35 வயதான அந்த பெண் எழுத்தாளரை தாதர் நகரில் வசிக்கும் 75 வயதான தொழிலதிபர் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வரச் சொல்லி அழைத்து இருக்கிறார்.

இளம் எழுத்தாளருக்கு ஓட்டல் அறையில் நடந்த பயங்கரம் - சிக்கிய தொழிலதிபர்! | Writer Was Raped By A Businessman In A Hotel

அந்த எழுத்தாளரும் அங்கே செல்ல பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று அறைக்கதவை மூடி இருக்கிறார் தொழிலதிபர்.

தொழிலதிபர்

பின்னர் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார் தொழிலதிபர்.

இளம் எழுத்தாளருக்கு ஓட்டல் அறையில் நடந்த பயங்கரம் - சிக்கிய தொழிலதிபர்! | Writer Was Raped By A Businessman In A Hotel

அதையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்திருக்கிறார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்கும் காரணத்தையும் சொல்லி போலீசில் அந்தப்பெண் புகார் கொடுக்க போக,

பாலியல் வன்கொடுமை

தாதா தாவூத் இப்ராகிம் பெயரைச்சொல்லி மிரட்டியிருக்கிறார். அப்படியும் துணிச்சலாக இந்த பெண் போலீசில் சென்று புகார் அளித்துள்ளார்.

போலீசையும் தாவூத் பெயரைச்சொல்லியும், தன் மனைவியின் சகோதரர் ஹாஜி மஸ்தான் என்றும் சொல்லி மிரட்டி வருகிறார். புகாரை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்றும்,

மிரட்டல்

இந்த விவகாரம் பெரிதாக ஆனால் தன் தொழிலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும் என்றும் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி கொண்டிருக்கிறார் என்கிறது காவல்துறை வட்டாரம்.

ஆனாலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணைக்காக அந்தேரி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பெண் எழுத்தாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்வாணமாக்கி உடலில் சூடு.. மனைவியை டார்ச்சல் செய்த கணவன்!