என் குடும்பத்தையும் கெடுத்துட்ட - கவிஞர் தாமரை பகீர் குற்றச்சாட்டு!
ஒரு பெண்ணின் மீது தனது வாழ்க்கையை அழித்ததாக கவிஞர் தாமரை வைத்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவிஞர் தாமரை
கோவை, தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார் - ஈஸ்வரி தம்பதி. இவர்களுக்கு சிவா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவாவுக்கும் சென்னையைச் சேர்ந்த விஜி பழனிசாமி(37) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
அதில் சிவா தனக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனதை தெரிவித்துள்ளார். மேலும் விஜி ஏற்கனேவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. நாளடைவில், விஜி அவரது நண்பர்களுடன் இருந்த ஆபாச புகைப்படங்களை செல்போனில் சிவா பார்த்துள்ளார்.
குற்றச்சாட்டு
இதனால் விஜியை வீட்டை விட்டு சிவா அனுப்பியுள்ளார். பின்னர் சமாதானல் செய்து திரும்பிய நிலையில் தகராறில் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் விஜி, சிவாவுக்கு உளவியல் ரீதியாக மிரட்டல் விடுத்ததையடுத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன் 43 ஆடியோவை பதிவு செய்துள்ளார்.
அதில் நான் சாக்கடையில் விழுந்து விட்டேன் என்னுடைய சாவுக்கு நான் தான் காரணம் என பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது, இதற்கிடையில், கவிஞர் தாமரை `என்னுடைய முன்னாள் கணவருக்கும் எனக்கு ஏற்பட்ட பிரிவுக்கு காரணம் இந்த விஜி என்கிற விஜயலட்சிமிதான்.
இவரால் தான் என்னுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பதிவு ஒன்றை போட்டுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.