மச்சான்... எப்போ வரப்போற... காட்டுக்குள் மாஸா நடனமாடிய பிக்பாஸ் தாமரை...! - பாராட்டிய ரசிகர்கள்...!
‘மச்சான்... எப்போ வரப்போற...’ என்ற பாட்டுக்கு மாஸா நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தாமரைச் செல்வி
தாமரைச் செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார். இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தாமரைச் செல்வி, குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
106 நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு, திரும்பவும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாமரைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பாலா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டைட்டில் வின்னரானார். தாமரை 3ம் இடத்தை பிடித்தார்.
சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி 2வது சீசனில் தன் கணவருடன் பங்கேற்றார் தாமரை செல்வி. இந்நிகழ்ச்சியில் அமீர் - பாவனி ஜோடி வெற்றி பெற்றனர்.
மாஸா நடனமாடிய தாமரை செல்வி
இந்நிலையில் தாமரை செல்வி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம் பெற்ற, மல்லிப்பூ பாடலுக்கு கலக்கலாக நடனமாடியுள்ளார் தாமரை செல்வி.
இவரின் நடனத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.