மல்யுத்த வீரர்களை தரதரவென இழுத்து செல்லும் போலீசார் - வைரலாகும் வீடியோ!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களை போலீசார் இழுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
போராட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இவர் உத்தரப் பிரதேச பாஜக எம்பியாகவும் உள்ளார்.

இவர் இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அப்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
அதனால் மேரி கோம் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது, ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜந்தர் மந்தரில், போலீசார் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும், போராட்டத்தை நடத்துவதில் மல்யுத்த வீரர்கள் உறுதியாக இருந்தனர்.
வினேஷ் போகத் மற்றும் அவரது சகோதரி சங்கீதா போகத் தலைமையிலான மல்யுத்த வீரர்கள் தடைகளைத் தாண்டி செல்ல முயன்றனர். இதையடுத்து அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். மேலும், போலீசார் வேணுக்குள் அவர்களை இழுத்து செல்லும் வீடியோவை ஒலிம்பிக் வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
This is how our champions are being treated. The world is watching us! #WrestlersProtest pic.twitter.com/rjrZvgAlSO
— Sakshee Malikkh (@SakshiMalik) May 28, 2023
அதில் சாக்ஷி மாலிக்கை இழுத்து செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது, மேலும் அவர் "நமது நாட்டின் சாம்பியன்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை உலகம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி விமர்சனங்களை பெற்று வருகிறது.