1 பால் 5 ரன் - அனல் பறந்த மும்பை vs டெல்லி போட்டி - உருவான மும்பையின் அடுத்த ஸ்டார்..!

Delhi Capitals Mumbai Indians
By Karthick Feb 24, 2024 04:57 AM GMT
Report

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் விளாசி சஞ்சனா மும்பை அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளார்.

மும்பை vs டெல்லி

பெண்களுக்கான ஐபிஎல் போட்டி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. defending சாம்பியனான மும்பை மற்றும் டெல்லி அணி, நேற்று துவக்க போட்டியில் மோதின.

wpl-mi-beats-dc-in-last-ball-six

டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய டெல்லி அணியில், ஆலிஸ் கேப்சி 75(53) நட்சத்திர ஆட்டக்காரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42(24) ரன்களை அதிரடியாக விளாச, டெல்லி அணி 20 ஓவர்களில் 171/5 குவித்தது.

சிதறிய ஸ்டம்ப்...ஆனாலும்..? முதல் போட்டியில் ஆகாஷ் தீப்'பின் துரதிஷ்டம்

சிதறிய ஸ்டம்ப்...ஆனாலும்..? முதல் போட்டியில் ஆகாஷ் தீப்'பின் துரதிஷ்டம்

கடைசி பந்தில் 

172 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் யாஸ்திகா பாட்டியா 57(45), ஹர்மன்பிரீத் கவுர் 55(34) ரன்களை அதிரடியாக குவித்த நிலையிலும், கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

wpl-mi-beats-dc-in-last-ball-six

கடைசி பந்தில் களமிறங்கிய மும்பை அணியின் சஞ்சனா எதிர்கொண்டார். அலிஸ் கேப்ஸி பந்தை வீச, கடைசி பந்தை அதிரடியாக சிக்ஸர் விளாசிய சஞ்சனா மும்பை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இதன் மூலம், மும்பை அணி 173/6 ரன்களின் மூலம் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு புதிய ஸ்டாராக சஞ்சனா உருப்பெற்றுள்ளார்.