சிதறிய ஸ்டம்ப்...ஆனாலும்..? முதல் போட்டியில் ஆகாஷ் தீப்'பின் துரதிஷ்டம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியில் ஆகாஷ் தீப் அறிமுகமாகியுள்ளார்.
டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி ரஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அணியில் அறிமுகமாகியுள்ளார்.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்தார்.
பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், இந்திய அணியில் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு பதிலாக அறிமுகமான ஆகாஷ் தீப் 2-வது மற்றும் 4-வது ஓவரை வீசினார்.
ஏமாற்றம்
4-வது ஓவரின் 5-வது பந்தில் ஜாக் கிராவ்லி எதிர்கொண்ட போது, ஆகாஷ் தீப் வீசிய பந்து ஆஃப் ஸ்டெம்ப் பதம் பார்த்து பறந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் துள்ளி குதித்தார்.
ஆனால், உடனே பந்து நோபால் என நடுவர் அறிவிக்க ஆகாஷ் தீப் மட்டுமின்றி, இந்திய அணி ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.
WHAT A BALL....? But it's a no-ball.
— Johns. (@CricCrazyJohns) February 23, 2024
- Feel for Akash Deep on his debut. pic.twitter.com/1zeC3YkY3j