ஷ்ரேயஸ் ஐயருக்கு ஒருவருட தடை..? மற்ற வீரர்களுக்கான முன்எச்சரிக்கையா..?
மோசடி புகாரில் சிக்கியதன் காரணமாக இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஒரு வருட தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரஞ்சி கோப்பையை புறக்கணிக்கும் வீரர்கள்
இந்திய அணியில் இடம்பிடித்துவிடும் பல வீரர்கள் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பல கண்டங்கள் எழுந்து வருகின்றன. முன்னதாக இளம் வீரர் இஷான் கிஷன், ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை தவிர்த்ததன் காரணமாக அவர், அணியில் இருந்து ஓரங்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர் தடை
அதே போல தான், தற்போது நட்சத்திர ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயருக்கும் ஒரு வருட தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. தசை பிடிப்பின் காரணமாகவும், மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள ஷ்ரேயஸ் ஐயரை பிசிசிஐ ரஞ்சி தொடரில் விளையாடும் படி அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், தனக்கு இனமும் லேசான தசை பிடிப்பு இருப்பதாக பிசிசிஐ ஷ்ரேயஸ் ஐயர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு அவர் ரஞ்சி தொடரில் விளையாடுவதை தவிர்ப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், அவரை ஒரு வருட தேசிய அணியில் விளையாட பிசிசிஐ தடை விதிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரஞ்சி கோப்பை குறித்து கணிசமான கருத்துக்கள் வரும் நிலையில், மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நிலையில், ஷ்ரேயஸ் ஐயருக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.