அடுத்ததாக பும்ராவை தூக்கிய பிசிசிஐ; இந்திய அணிக்கு அடி - ஏன் இந்த முடிவு?
டெஸ்ட் தொடரில் பும்ராவை பிசிசிஐ நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் தொடர்
இந்திய- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். இத்தொடரில் இருந்து விராட் கோலி முழுவதுமாக விலகிய நிலையில், கே.எல். ராகுல் காயம் காரணமாகவும்,
ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஃபார்மால் அணியில் இருந்து நீக்கபட்டார்கள். தற்போது பிசிசிஐ தானாக முன் வந்து முக்கிய வீரரான வேக பந்துவீச்சாளர் பும்ராவை நீக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக டெஸ்டில் விளையாடி வருகிறார் பும்ரா.
பும்ரா நீக்கம்
மேலும், அவர் ஐ.பி.எல் தொடர் மற்றும் 2024 டி20 உலககோப்பை தொடரிலும் பங்கேற்கிறார். இடைவிடாது பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடுவதால் அவருக்கு காயம் ஏற்படலாம். எனவே, வருகின்ற டி20 தொடரில் பங்கேற்க முடியாமல் போகலாம் என்பதால் அவரை தற்போது நடக்கும் 4 வது டெஸ்ட் தொடரில் இருந்து விளக்கியுள்ளனர்.
ஏற்கனவே டெஸ்டில் 3 போட்டிகளில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இதில் இந்திய அணி நான்காவது தொடரில் தோல்வி அடைந்தால் ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா பங்கேற்க வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.
பும்ரா இல்லாத போட்டியில் முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் வேகப் பந்துவீச்சாளர்களாக பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.