வெறும் 105 ரூபாய் இருந்தால் போதும் வீடு வாங்கலாம்! அது எப்படி தெரியுமா?
105 ரூபாய்க்கு ஒரு ‘வீடு’ வாங்கிய ஒருவரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
105 ரூபாய் வீடு
தனக்கென ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் இருக்கும். ஆனால் ஆடம்பரமான வீட்டைக் கட்டுவதற்காக கண்மூடித்தனமாக பணம் சம்பாதிப்பதில் ஒரு வகையான மக்கள் வாழ்நாள் முழுவதும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அதே சமயத்தில் மலிவான இடத்தைக் கூட பிரமிக்க வைக்கும் அளவுக்கு சிறந்த படைப்பாற்றல் கொண்ட வடிவமைக்கவும் செய்கிறார்கள். இங்கிலாந்தின் டெர்பிஷையரில் வசிக்கும் பாப் காம்ப்பெல் என்ற ஒரு நபர் இந்திய மதிப்பின் படி வெறும் ரூ. 105 செலவில் வீட்டை வாங்கியுள்ளார்.
அதில் அவரரும் தனது மனைவி கரோல் ஆன் உடன் எளிமையான வீட்டில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் அந்த வீட்டை அமைப்பதற்கு ரூ. 105 தான் செலவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாணய மதிப்பில் ஒரு பவுன்ட் அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 105 செலவில் அந்த நபர் ஒரு பெரிய ட்ரம்மை வாங்கியுள்ளார்.
‘வாரிசு’ படத்தில் காட்டப்பட்ட பிரம்மாண்ட வீடு.. - அதன் மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்த ரசிகர்கள்...!
அது எப்படி ?
மெல்ல அந்த சிறிய ட்ரம்முக்குள் கட்டில், மெத்தை, கிட்சென் உள்ளிட்டவற்றை காம்ப்பெல் அமைக்கத் தொடங்கினார். அதே வீட்டிற்குள் மாடி படுக்கை கூட அமைத்துள்ளார். முதலில் இந்த வீடு அவரது மனைவிக்கு பிடிக்கவில்லையாம் ஆனால் நாட்கள் செல்ல இந்த எளிமை அவரை ஈர்த்துள்ளது.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். அதேபோல வீட்டை சுற்றிலும் இயற்கையை ரசிக்க மரங்களை வளர்த்து குளத்தையும் அமைத்துள்ளார். இந்த ட்ரம் வீடு 4 மீட்டர் சுற்றளவும், 4 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது.
இந்த வித்தியாசமான ட்ரம் வீடு பற்றய தகவல் உலகம் முழுவதும் பரவி கவனம் பெற்றுள்ளது. இதை பார்த்த பலரும் இதே போல் ஒரு வீட்டை அமைக்கலாமா என்று இணையத்தில் நெட்டிசன்கள் கமென்ட் வருகின்றனர்.