வீட்டின் மாடியிலேயே...நயன்தாரா செய்த காரியம் - அசந்து போன ரசிகர்கள்

Karthick
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவின் முன்னணி ஜோடியாக வளம் வருகிறார்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
விக்கி - நயன்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நீண்ட வருடமாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஜோடியாக திகழும் இவர்கள், தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.
தென்னிந்தியாவை போலவே ஹிந்தியில் அறிமுகமான ஒரே படத்தில் ஜாக்பாட் அடித்த நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றார். இருவரும் படங்களில் தீவிரமாக இருக்கும் பட்சத்திலும் அடிக்கடி பல couple goal'யிலும் ஈடுப்பட்டு வருகிறார்கள். அண்மையில் தனியார் புத்தகத்திற்கு கூட இருவரும் ஒன்றாக போட்டோஷூட் நடத்தினார்.
மாடியிலேயே...
இயக்குனர் விக்னேஷ் - நயன்தாரா தம்பதி தங்களின் பட கதைகளை விவாதம், பிசினஸ் விஷயங்கள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு வீட்டின் மொட்டை மடியிலேயே பிரத்யேகமாக அலுவலகம் ஒன்றை காட்டி வருகிறார்கள்.
இருவருமே தொழில் எந்தளவுக்கு ஈடுபாடு காட்டுகிறார்களோ, அதே அளவிற்கு குழந்தை வளர்ப்பிலும் முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த வேளையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது.
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நயன் - விக்கி வீட்டின் மாடியில் கட்டப்பட்டு வரும் அலுவலகத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.