கர்ப்பத்தின் போது விட்டு சென்ற கணவர் - குழந்தையுடன் உருக்கமாக பதிவிட்டுள்ள சன் டிவி பிரபலம்
சன் டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர்.
திவ்யா ஸ்ரீதர்
கேளடி கண்மணி தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். சின்னத்திரையில் முக்கிய நடிகையாக உயர்ந்த இவர், தொடரில் தன்னுடன் நடித்த அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்கு கருத்து வேறுபாடுகளின் மூலம் அடிக்கடி சண்டை நிகழ, அர்ணவ் மீது காவல் நிலையத்திலும் திவ்யா புகார் அளித்திருந்தார். கணவர் பிரிந்து சென்ற போதிலும், திவ்யா குழந்தையை பெற்று எடுத்து வளர்த்து வருகிறார்.
காலம்..
இந்த நிலையில், அவர் தன்னுடைய மகளின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.அதில் பாவாடை சட்டையில் அவரது மகள் க்யூட்டாக நடந்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

காலம் வெகு விரைவில் கடந்து விடும் என்றும் ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டாடுங்கள் என்றும் இந்த வீடியோவில் திவ்யா ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றொரு பேரழிவு திட்டம்! நிந்தாவூரில் சாரா பதுங்கியிருந்ததாக தகவல் IBC Tamil