சாதமும் உப்பும் மட்டுமே உணவு - மழலைகளுக்கு நடக்கும் கொடூரம்!

Viral Video Uttar Pradesh
By Sumathi 2 மாதங்கள் முன்

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, உப்பு மட்டுமே கலந்த சாதம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்துணவு

உத்தரப் பிரதேசம், அயோத்தியா பகுதியில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு மதிய உணவில், வெறும் சாதமும், உப்பும் தான். சாதத்தை தட்டில் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றுவதை போல பள்ளி நிர்வாகிகள் உப்பை கொட்டுகின்றனர்.

சாதமும் உப்பும் மட்டுமே உணவு - மழலைகளுக்கு நடக்கும் கொடூரம்! | Worst Free Midday Meals In Uttarpradesh

இதனை அங்கு வந்த ஒரு குழந்தையின் தந்தை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது அவர், "ஏன் குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவை கொடுக்கிறீர்கள்?" என அங்குள்ள பள்ளி நிர்வாகிகளிடம் கேட்கிறார்.

 சாதமும் உப்பும்

ஆனால் அவர்கள், தங்கள் முகத்தை காட்டாமல் திரும்பி நிற்கின்றனர். பின்னர் அவர், பள்ளிக்கு முன்பு இருக்கும் அறிவிப்பு பலகையை வீடியோ எடுக்கிறார். அதிலோ, பள்ளியில் மதிய உணவாக சாதம், சப்பாத்தி, பருப்பு தால், காய்கறிகள், பால் வழங்கப்படுவதாக எழுதி இருக்கின்றன.

இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விஷயம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.