தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி : தமிழக அரசின் அசத்தல் திட்டம்
அரசு பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு இன்று தொடங்கியுள்ளது.
மாணவர்களுக்கு சிற்றுண்டி
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் படி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழக அரசு இன்று தொடங்கியுள்ளது. 15 மாவட்டங்களில் முதற்கட்டமாக பணிகள் தொடங்கவுள்ளது.
முதல்வர் தொடங்கி வைப்பார்
விரைவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.

இந்த சிற்றுண்டி மகளிர் சுய உதவிக்குழுவினால் சமைத்து வழங்கப்படும் என்றும்
காலை 5:30-7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்க வேண்டும்,காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan