வாட்டி வதைக்கும் கடன் சுமை; வராஹி அம்மனை இப்படி வழிப்பட்டால் போதும்.. பொற்காலம்தான்!
வராஹி அம்மனை எவ்வாறு வழிப்படலாம் என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடன் சுமை
இந்து மதத்தின்படி, ஏழு தாய் தெய்வங்களின் ஒருவர் வராஹி அம்மன். பன்றியின் முகத்தையும், ஒரு சக்கரத்தை கையில் ஏந்தியவாறும் காட்சியளிக்கிறார். வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து,
கடன் பிரச்சனையால் பெரும் அவதியில் இருக்கும்போது வாராஹியை மனதார வழிப்பட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலும் மக்களால் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதி நாட்களே விசேஷமாக கருதப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை ஒவ்வொரு புதன் கிழமையும் வழிபட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
கடனுக்கு காசு கொடுத்துவிட்டு திரும்ப வரவில்லை என்றாலும், வரவுக்கு மீறி செலவாகினாலும், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து வரலாம்.
மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை - பக்தர்கள் பரவசம்
வாராஹி அம்மனை வழிபாடு,
- பொதுவாக வாராஹி அம்மனை பிரம்மா முகூர்த்தம் அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின்பு அதாவது இரவு நேரத்தில் வழிபடுவது சிறந்தது.
- ஒவ்வொரு புதன் கிழமையும், வாராஹி அம்மன் சன்னதியில் ஒற்றைப் படை எண்ணில், அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வரவும். ஒரு சில வாரங்களிலேயே மிகப்பெரிய மாற்றங்கள் தெரியும்.
- சிவப்பு நிற மலர்கள் மற்றும் நறுமணம் மிக்க மலர்களை அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செய்யலாம்.
- மாதுளை, பசும்பால், பனை வெல்லம் மற்றும் வெல்லத்தால் செய்த இனிப்புகளை நைவேத்தியம் செய்யலாம்.