மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை - பக்தர்கள் பரவசம்
மதுரையில் மக்களுக்கு மிகவும் பிரசித்திப்பெற்ற விழா என்றால் அது சித்திரை திருவிழா தான்.
மதுரை மாவட்டத்தை சுற்றி லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வைகை ஆற்றில் ஒன்று திரண்டி கோலாகலமாக சித்திரை திருவிழாவை கொண்டாடி மகிழ்வார்கள். அந்த விழாவில் ஒன்று தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 05ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று (ஏப்ரல் 14ம் தேதி) ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.
இந்த திருக்கல்யாணத்திறக்காக ஊட்டியிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் வண்ண மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த வண்ண மலர்களுக்காக ரூ.20 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானிலிருந்து வண்ண மலர்கள் கொட்ட உள்ளன. இந்த அழகிய கண்கொள்ள காட்சியை பார்க்க பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தார்கள்.
இதன் பிறகு, சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடந்தது.
திருக்கல்யாணம் முடிந்த பிறகு, அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
இன்று இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி 4 மாசி வீதிகளை வலம் வர உள்ளனர்.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கிறார்கள்.
தமிழ்புத்தாண்டு, சித்திரை திருநாள், திருக்கல்யாண நிகழ்வு என்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.