குடிநீர் தொட்டியில் புழுக்கள், அசுத்தமான கழிவறை - போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவிகள்!

Tamil nadu Salem
By Vinothini Oct 06, 2023 11:03 AM GMT
Report

கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டி அசுத்தமாக இருப்பதாக பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி மாணவி

சேலம் மாவட்டம், கோட்டை மகளிர் மேல்நிலை பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகாரளித்தனர்.

worms-in-drinking-water-students-protest-in-salem

இதனை தொடர்ந்து, அந்த பள்ளி மாணவிகளின் பெற்றோரும் வந்து தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகாரளித்தனர். ஆனாலும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவிகள் அவதிப்பட்டனர்.

6 மாத கர்ப்பிணியான 11-ம் வகுப்பு மாணவி.. பாலியல் வன்கொடுமை செய்த 5 காதலர்கள் - அதிர்ச்சி!

6 மாத கர்ப்பிணியான 11-ம் வகுப்பு மாணவி.. பாலியல் வன்கொடுமை செய்த 5 காதலர்கள் - அதிர்ச்சி!

அசுத்தம்

இந்நிலையில், அந்த பள்ளியின் குடிநீர் தொட்டியில் புழுக்கள் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் புகார் அளித்தால், மதிப்பெண்ணை குறைத்து விடுவோம் என ஆசிரியர்கள் மிரட்டுவதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் போதுமான கழிப்பறை வசதிகள் செய்து தரவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.