உலகில் மிக மோசமான விமான சேவை இதான்.. லிஸ்டில் இந்திய நிறுவனம் - வெடித்த சர்ச்சை!

Flight World Air India
By Swetha Dec 06, 2024 10:30 AM GMT
Report

மோசமான மற்றும் சிறப்பான விமான சேவை அளித்து வரும் நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 விமான சேவை 

பேருந்து, ரயில், கப்பல் என பல வகையான போக்குவரத்து இருந்தாலும் குறைந்த நேரத்தில் வெகு தூரத்திற்கு செல்வதென்றால் விமான பயணத்தையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். தொலைதூர நாடுகளுக்கு விமான பயணம் மட்டுமே ஒரே தேர்வாக இருக்கும். 

உலகில் மிக மோசமான விமான சேவை இதான்.. லிஸ்டில் இந்திய நிறுவனம் - வெடித்த சர்ச்சை! | Worlds Worst Airlines List Is Here

கார் மூலம் 8 மணி நேரத்தில் செல்லும் இடத்தை விமான பயணம் மூலம் 1 மணி நேரத்திலே அடைந்து விடலாம். பலருக்கும் இது போல் குறைந்த நேரமாவது ஒரு முறை விமானத்தில் பயணம் செய்து விட வேண்டுமென ஆசை இருக்கும்.

இவ்வாறு உலக நாடுகளை இணைக்கும் வகையில் விமான சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் என்று எடுத்து பார்த்தால் சில மட்டுமே கண்ணில் தென்படும்.

உலகில் மிக மோசமான விமான சேவை இதான்.. லிஸ்டில் இந்திய நிறுவனம் - வெடித்த சர்ச்சை! | Worlds Worst Airlines List Is Here

இதுதொடர்பான ஆய்வு நடத்தி பட்டியல் ஒன்றை ஐரோப்பாவை சேர்ந்த ஏர் ஹெல்ப் (AirHelp) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்குதல், தரமான சேவையை வழங்குதல், இக்கட்டான நேரங்களில் போதிய இழப்பீடு வழங்குதல்,

உணவு, பயணிகள் சவுகரியம், விமான ஊழியர்கள் சேவை எனப் பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச அளவில் டாப் 10 இடங்களை பிடித்த விமான சேவை நிறுவனங்கள் பின்வருமாறு, 

உலகிலேயே சிறிய விமான சேவை; பயண நேரம் 90 நொடி மட்டுமே - எங்கு தெரியுமா?

உலகிலேயே சிறிய விமான சேவை; பயண நேரம் 90 நொடி மட்டுமே - எங்கு தெரியுமா?

இந்திய நிறுவனம்

1 - ப்ரூசல்ஸ் ஏர்லைன்ஸ் 2 - கத்தார் ஏர்வேஸ் 3 - யுனைடெட் ஏர்லைன்ஸ் 4 - அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 5 - பிளே (ஐஸ்லாந்து) 6 - ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் 7 - எல்.ஓ.டி பாலிஷ் ஏர்லைன்ஸ் 8 - ஏர் அரேபியா 9 - வைடெரோ 10 - ஏர் செர்பியா 

உலகில் மிக மோசமான விமான சேவை இதான்.. லிஸ்டில் இந்திய நிறுவனம் - வெடித்த சர்ச்சை! | Worlds Worst Airlines List Is Here

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் 6.15 மதிப்பெண்கள் உடன் 61வது இடத்தை பிடித்துள்ளது. கடைசி 10 இடங்களை பிடித்து விமான சேவை நிறுவனங்கள் அதாவது மோசமான சேவை அளிக்கும் விமானங்கள்,

 100 - ஸ்கை எக்ஸ்பிரஸ் 101 - ஏர் மொரிஷியஸ் 102 - டரோம் 103 - இண்டிகோ 104 - பெகாசஸ் ஏர்லைன்ஸ் 105 - எல் அல் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் 106 - பல்கேரியா ஏர் 107 - நவுவேலைர் 108 - பஸ் 109- துனிஸ் ஏர்

உலகில் மிக மோசமான விமான சேவை இதான்.. லிஸ்டில் இந்திய நிறுவனம் - வெடித்த சர்ச்சை! | Worlds Worst Airlines List Is Here

இதில் ,மற்றொன்று இந்தியாவை சேர்ந்த இண்டிகோ நிறுவனம். இது மிக மோசமான சேவைகள் வழங்கும் நிறுவனமான கடைசி 10 இடங்களுக்குள் வந்திருக்கிறது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகளை ஏற்க மறுப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய இண்டிகோ நிறுவனம், தாங்கள் நேரம் தவறாமை, பயணிகளுக்கு சிறப்பான சேவை, பாதுகாப்பான பயணம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து உறுதி செய்து வருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த பட்டியல் சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.