உலகிலேயே சிறிய விமான சேவை; பயண நேரம் 90 நொடி மட்டுமே - எங்கு தெரியுமா?
உலகின் குறைந்த நேர விமான பயணத்தை பற்றி பார்க்கலாம்.
விமான பயணம்
பேருந்து, ரயில், கப்பல் என பல வகையான போக்குவரத்து இருந்தாலும் குறைந்த நேரத்தில் வெகு தூரத்திற்கு செல்வதென்றால் விமான பயணத்தையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். தொலைதூர நாடுகளுக்கு விமான பயணம் மட்டுமே ஒரே தேர்வாக இருக்கும்.
கார் மூலம் 8 மணி நேரத்தில் செல்லும் இடத்தை விமான பயணம் மூலம் 1 மணி நேரத்திலே அடைந்து விடலாம். பலருக்கும் இது போல் குறைந்த நேரமாவது ஒரு முறை விமானத்தில் பயணம் செய்து விட வேண்டுமென ஆசை இருக்கும்.
1.5 நிமிட பயணம்
ஆனால் இங்கு ஒரு விமான பயணம் விமான டிக்கெட் புக் செய்யும் நேரத்தை விட குறைவாக உள்ளது. ஆம் மொத்த பயண நேரமே 1.5 நிமிடங்கள் தான். ஸ்காட்லாந்தில் உள்ள வெஸ்ட்ரே(Westray) மற்றும் பாப்பா வெஸ்ட்ரே(Papa Westray) தீவுகளுக்கு இடையே இந்த விமானம் இயக்கப்படுகிறது.
இரு தீவுகளுக்கும் இடையே உள்ள தொலைவு 2.5 கி.மீ ஆகும். வானிலை சரியாக இருந்தால் பயண நேரம் 53 நொடிகள் மட்டுமே இருக்கும். ஸ்காட்லாந்தின் ஒரே பெரிய விமான நிறுவனமான லோகனேர், 1967 ஆம் ஆண்டு முதல் இந்த விமான சேவையை வழங்குகிறது.
இது உலகின் மிகக் குறுகிய விமானத்தை அனுபவிக்க விரும்பும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஸ்டூவர்ட் லிங்க்லேட்டர் என்ற விமானி 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதற்குள் 12,000 முறைக்கு மேல் இந்தப் பாதையில் பறந்துள்ளார்.