239 பயணிகளுடன் காணாமல் போன MH370 மலேசிய விமானம் - 10 ஆண்டுக்கு பின் விலகிய மர்மம்

Australia Malaysia India Flight
By Karthikraja Aug 28, 2024 03:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பான தகவலை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அளித்துள்ளனர்.

MH370 விமானம்

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் ஆம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்க்கு MH370 விமானம் வழக்கம் போல் இரவு நேரத்தில் புறப்பட்டது. 

malaysia mh370 flight

227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக் கொண்டு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் தென் சீனா கடலின் மேற் பரப்பில் பறந்த விமானம் அதன் பிறகு ரேடாரின் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனது. 

இந்திய கிரிக்கெட் அணியால் சிக்கலில் சிக்கிய விமான நிறுவனம்

இந்திய கிரிக்கெட் அணியால் சிக்கலில் சிக்கிய விமான நிறுவனம்

20,000 அடி ஆழம்

இந்த விமானம் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இதன் பிறகு 14 நாடுகள் இணைந்து பல நூறு கோடி செலவில் தேடுதல் வேட்டையை நடத்தியது. வருட கணக்கில் தேடியும் இதுநாள் வரை விமானத்துக்கும் அதில் இருந்தவர்களும் என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்து வந்தது. இது தொடர்பாக விதவிதமான யூகங்கள் வெளியான வண்ணம் உள்ளது. 

mh370 flight current status

இதுவரை கிடைத்த சாட்டிலைட் தரவுகளை ஆராய்ந்ததில், MH370 விமானமானது இந்தியப் பெருங்கடலின் தெற்கே, ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையை ஒட்டிய பகுதியில் விழுந்திருக்கும் என நம்பப்படுகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இது தொடர்பாக புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தென் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் Broken Ridge எனப்படும் 20,000 அடி ஆழம் கொண்ட oceanic plateau துளை உள்ளது. இதற்குள்தான் MH370 விமானம் விழுந்திருக்கும் என்றும் அதனாலேயே எந்த ஒரு ரேடாராலும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.