உலகின் மாபெரும் பணக்காரர்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?
உலகின் மாபெரும் பணக்காரர்களின் கல்வி தகுதி குறித்த தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பணக்காரர்களின் கல்வி தகுதி
பெரும் பணக்காரர்கள் பலர் கல்வியில் சிறந்து விளங்கினாலும் சிலர் பாதியிலே படிப்பை கைவிட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றல் இயற்பியலில் பி.எச்.டி சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாளே தொழில் தொடங்கியதால் தனது படிப்பை பாதியிலே கைவிட்டார்.
பெர்னார்ட் அர்னால்ட் ஃபிரான்சின் தலைச்சிறந்த எகோல் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் மற்றும் கணித பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்குவதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து சட்ட படிப்பில் விலகுவதற்கு முன்பாக மிகவும் கடுமையான கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்புகளை முடித்தார்.
வாரன் பஃபெட், கொலம்பியா வணிக பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.
மார்க் ஹூர்ரக்பெர்க், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் உளவியல் படித்துக்கொண்டிருந்தபோது, ஃபேஸ்புக் நிறுவனத்தை முன்னுக்கு கொண்டுவரும் முயற்சியில் கல்லூரி படிப்பை கைவிட்டார்.