வரி ஏய்ப்பு செய்தார்களா உலக பணக்காரர்கள் ? ரகசியம் உடைக்கும் பிரபல பத்திரிக்கை!

usa taxe worldrichest popularmagazine Elon Mus
By Irumporai Jun 10, 2021 03:46 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல புலனாய்வு பத்திரிகை நிறுவனமான புரோபப்ளிகா அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கையான புரோபப்ளிகா தனது செய்தியில்:

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க் போன்ற பெரும் பணக்காரர்கள் பல ஆண்டுகளாக வரியும்  வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறுகிறது.

வரி ஏய்ப்பு செய்தார்களா உலக பணக்காரர்கள் ? ரகசியம் உடைக்கும் பிரபல பத்திரிக்கை! | World Richest People Evade Taxes Popular Magazine

பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 15 சதவீதம் வரி விதிக்க ஜி-7 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அமெரிக்காவில் உள்ள டாப் 25 பணக்காரர்கள் தங்களின் வருமான வரியை மிகக்குறைவாகவே செலுத்துவதாக கூறியுள்ளது

அதாவது மொத்த வருமானத்தில் சராசரியாக 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துவதாக கூறுகிறது.

புரோபப்ளிகா பட்டியலில் வரி ஏய்ப்பு செய்த பணக்காரர்கள்:

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், 2007 முதல் 2011-ம் ஆண்டு வரை வருமான வரியை செலுத்தவில்லை என கூறியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க் 2018-ம் ஆண்டு முழுவதும் வருமான வரி செலுத்தவில்லை என தனது செய்தியில் கூறியுள்ளது

மேலும் பிரபல தொழிலதிபர்களான மைக் புளூம்பெர்க், வாரன் பபெட் போன்றோரும் சில ஆண்டுகள் வருமான வரியை முற்றிலுமாக தவிர்த்தவர்கள் என 'புரோபப்ளிகா' கூறுகிறது.

  போர்ப்ஸ் பத்திரிக்கையின் தரவுகளை பயன்படுத்தி இந்த அறிக்கையை தயார் செய்ததாக கூறும் 'புரோபப்ளிகா.

2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 25 பணக்கார அமெரிக்கர்களின் சொத்து மதிப்பு 401 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது ஆனால் அவர்கள் அந்த ஆண்டுகளில் வெறும் 13.6 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே வரி செலுத்தியதாகவும் தனது அறிக்கையில் உள்ளதாக கூறுகிறது

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டில் சமநிலையை ஏற்படுத்த அமெரிக்காவில் உள்ள பெரும்  தொழிலதிபர்களுக்கு வரியை அதிகரிக்கப் போவதாக கூறிவரும் நிலையில், இந்த அறிக்கை  வெளியாகியுள்ளது

அதே சமயம் அமெரிக்க பணக்காரர்களின் வரி விபரங்களை வெளியிட்டது சட்டவிரோதமானது என வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத தகவலை வெளியிடுவது சட்டவிரோதமானது என்றும், இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள்" என கூறியுள்ளது.