உலகின் மிகவும் ஒல்லியான ஹோட்டல் இதுதான்! ஆனால் அத்தனை வசதிகள் - எங்கு தெரியுமா?
உலகின் மிகவும் ஒல்லியான ஹோட்டல் குறித்த தகவல்.
பிடு ரூம்ஸ்
இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள, lசலாதிகாவில் 'மெர்பாபு' மலையின் அடிவாரத்தில் 'பிடு ரூம்ஸ்' என்ற ஹோட்டல் உள்ளது. இது உலகின் ஒல்லியான ஹோட்டல் என்று கூறப்படுகிறது. இந்த ஹோட்டலில் 7 தளங்கள் உள்ளன.
அதில் மொத்தமாக 7 அறைகள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு அறையிலும் இரட்டை படுக்கை, ஷவருடன் கூடிய ஒரு சிறிய குளியலறை மற்றும் டாய்லெட் வசதிகள் உள்ளன. ஹோட்டலின் மேல் தளத்தில் ஒரு பார் மற்றும் உணவகம் உள்ளது. மேலும், இங்கிருந்து மலையின் கம்பீரமான அழகை கண்டு ரசிக்கலாம் என்பது ஹோட்டலின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
ஒல்லியான ஹோட்டல்
பிடு ரூம்ஸ் குறித்து அதன் உரிமையாளரும், கட்டிடக் கலைஞருமான ஆரே இந்திரா கூறுகையில் "மக்கள் சலாதிகாவை ஒரு புதிய வழியில் அனுபவிக்க வேண்டுமென நான் விரும்பினேன்.
உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய புதிய வகை சுற்றுலாவை உருவாக்க இது எனது புதிய தளமாக மாறியுள்ளது. இங்கே நாங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறோம். இதுவரை எங்கள் விருந்தினர்களிடம் இருந்து பெறும் எதிர்வினை என்னவென்றால், வசதியாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் இவ்வளவு சிறிய இடம் போதுமா என்று ஆச்சரியப்படுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.