'பெரிய மனசும் அன்பும் இருக்கு' - உலகின் மிகவும் உயரம் குறைந்த தம்பதி படைத்த சாதனை!
உலகின் மிகவும் உயரம் குறைந்த ஒரு ஜோடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
உயரம் குறைந்த ஜோடி
உலகின் மிகவும் உயரம் குறைந்த ஜோடி என்ற பெயரை பெற்றவர்கள் பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா - கட்யூசியா லி ஹோஷினோ. இவர்கள் இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள்.
கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நட்பு காதலாக மாறவே தங்களது 31-28 வயதில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கின்னஸ் சாதனை
இந்நிலையில் இந்த தம்பதியை உலகிலேயே மிகக் குறைவான உயரம் கொண்ட தம்பதி என கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.இதனை தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதில் பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும். இந்த ஜோடிக்கு தற்போது உலகம் முழுவதில் இருந்தும் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தது வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நாங்கள் உயரம் குறைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் எங்களிடம் பெரிய இதயங்களும், நிறைய அன்பும் உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.